
ரோட்டில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் என மூன்று பேரும் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோபிநாத், மகன் கிரி, மகள் மோனிகா. இந்நிலையில் கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்கில் வீடு திரும்பிய போது கோவளத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது சரியாக வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரத விதமாக திடிரென மோதியது. இந்த கோரவிபத்தில் பைக்குடன் சேர்ந்து 3 பேரும் லாரியின் பின்புறத்தில் சிக்கிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து படிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சாலையோரமாக லாரியை நிறுத்திய டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், சாலை விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.