“80 வயது மூதாட்டியை கீழே தள்ளி பாலியல் அத்துமீறல்” - இயற்கை உபாதை கழிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்.. யார் அந்த மர்ம நபர்?

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டு...
Tirunelveli 80 Year Old Woman Assault Attempt
Tirunelveli 80 Year Old Woman Assault Attempt
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் 3 வயது சிறுமி முதல் 90 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் 80 வயது மூதாட்டியிடம் வாலிபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று(நவ 16) அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்று பகுதிக்கு சென்றுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. அப்போது அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியைத் திடீரென கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி, தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டு உள்ளார். அவரது சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த மற்றொரு பெண் உடனடியாக அங்கு ஓடி வந்துள்ளார். மேலும் அப்பகுதிக்கு அருகில் இருந்த மக்களும் வருவதை அறிந்த மர்ம நபர் அச்சத்தில் மூதாட்டியை அங்கேயே தள்ளிவிட்டு உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் மூதாட்டியை மீட்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். மேலும், மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற நபரை அடையாளம் காணும் வகையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.