“பட்டப்பகலில் அடுத்தடுத்து நடந்த கொலைகள்” - சென்னையில் இருந்து ஊர் திரும்பியவர் செய்த சம்பவம்!

நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்...
Tirunelveli Manipuram Double Murder
Tirunelveli Manipuram Double Murder
Published on: 
Updated on: 
2 min read

திருநெல்வேலி மாவட்டம், சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில், கோயில் வழிபாடு தொடர்பான தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணிப்புரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய செந்தில் என்பவர் சமீபத்தில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இன்று (செப் 29) காலை சுமார் 9.30 மணியளவில், செந்தில் தனது மனைவியுடன் அங்குள்ள நல்ல மாடன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நரேந்திரன் என்பவருடன் கோயில் வழிபாடு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே செந்தில் கோவில் நிர்வாக குழுவில் உள்ள நிலையில் அவர் கோயிலுக்கு வரும்போது அவரது காரை கோவிலுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்துவது வழக்கம் என் சொல்லப்படுகிறது. அந்த இடம் நரேந்திரன் குடும்பத்திற்கு சொந்தமான இடம் என்பதால் அவர்கள் காரை அங்கு நிறுத்த வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இரண்டு குடும்பத்தினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் வழிபாட்டில் இரண்டு குடும்பத்தினருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

Admin

இதில் ஆத்திரமடைந்த செந்தில், நரேந்திரனின் தந்தையான 71 வயதுடைய டால்டன்மற்றும் அவரது சகோதரர் 75 வயதுடைய நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த டால்டன், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கோலஸ் ராஜரத்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தில் நரேந்திரனுக்கு இடது கை புஜத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலின் போது செந்திலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சந்திப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து இதற்கு முன்பு காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் பிரச்சனையில் அண்ணன் தம்பி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com