3 சென்ட் இடத்திற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இறந்த விருதாம்பாளின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
3 சென்ட் இடத்திற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் - மாவட்ட ஆட்சியரிடம் மனு
Admin
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விருதாம்பாள். வயது 60. இவருக்கு 3 மகன் மற்றும் 3 மகள்கள் என ஆறு பேர் உள்ளனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக 21 சென்ட் நிலத்தை அனுபவித்து வரும் நிலையில் அதில் மூன்று சென்ட் நிலத்தை இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் எல்லப்பன் என்பவர் விருந்தாம்பாள் குடும்பத்திற்கு தெரியாமலேயே தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியில் விருதாம்பாள் அவர்கள் மாட்டு கொட்டகை அமைத்து அதில் வைக்கோல் போர் அமைத்து சேமித்து வந்துள்ளனர்.

இதனை எல்லப்பன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் இது தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்திற்கு உரிய பட்டா தங்களிடம் உள்ளது என அடிக்கடி விருதாம்பாள் குடும்பத்துடன் சண்டை இட்டு வந்துள்ளனர்.

கடந்த இரண்டாம் தேதி வைக்கோல் வைத்திருந்ததை எல்லப்பன் தரப்பினர் கொளுத்த முயன்ற போது விருதாம்பாள் அவரது பேத்தி சரண்யா, அவரது மகன் ஆறுமுகம் ஆகியோர் தடுக்க முயன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த எல்லப்பன் தரப்பு விருதாம்பாள் மீது மன்னனை ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த விருதாம்பாளை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி அதிகாலையில் நான்கு மணி அளவில் சிகிச்சை பலனின்றி விருதாம்பாள் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்த நிலையில் இதுவரை எதிர் தரப்பில் எல்லப்பன், கோபிகிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் உள்ளிட்ட நால்வரையும் இதுவரை கலசப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்யவில்லை என ஆறுமுகம் அவர்கள் குற்றம் சாட்டினார்.

மேலும் இறந்த விருதம்பாளின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்காத நிலையில் உடலை வாங்கவில்லை என்றால் நாங்களே தீ வைத்துக் கொளுத்தி விடுவோம் என காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாகவும் ஆகவே தங்களது தாயாரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இறந்த விருதாம்பாளின் குடும்பத்தினர் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com