தாய் மற்றும் மகளுக்கு நடந்த துயரம்! சென்னை பெரும்பாக்கத்தில் நடந்த சோகம்

தாய் மற்றும் மகளுக்கு நடந்த துயரம்! சென்னை பெரும்பாக்கத்தில் நடந்த சோகம்
Published on
Updated on
2 min read

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தாய் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது கனரக வாகனம் மோதி இருவர் மீதும்  ஏறி இறங்கியதால்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு. காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் அதையும் மீறி பல கனரக வாகனங்கள் அனுமதி இல்லாத நேரத்தில் செல்வதால் இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகளவு அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சேகரன் நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் புனிஷ்,(38) மனைவி லாவண்யா (35), இவர்களின் மகள் இனியா(13) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிறுமி  இனியா பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் இனியாவை பள்ளிக்கு விடுவதற்காக அவருடைய தாய் லாவண்யா ஆக்டிவா பைக்கில்  அருகில் உள்ள  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லோடு வேன் வேகமாக சென்றதில் லாவண்யா சென்ற பைக் மீது மோதியதில் தாய், மகள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் லோடு வேன் பின் சக்கரம் தாய் மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தாய் லாவண்யா,  மகள் இனியா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லோடு வேன் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மகள் மற்றும் மனைவி உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுகின்ற காட்சி அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மகளை பள்ளியில் விடுவதற்காக முறையாக ஹெல்மெட் அணிந்து சென்ற நிலையிலும் லோடு வேன் ஓட்டுநரின் அலட்சியத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கணவன், மனைவி, மகள் என மூவர் மட்டும் வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது மனைவி, மகள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்தியது

மேலும் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் அதையும் மீறி பல கனரக வாகனங்கள் அனுமதி இல்லாத நேரத்தில் செல்வதால் இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகளவு அரங்கேறி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும்  போக்குவரத்து போலீசார் அதை கண்டும் காணாமலும் அலட்சியமாக இருப்பதே இதுபோன்ற அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com