ரயிலில் கால்களை தொங்க விட்டபடி பயணம்.. இருவரின் கால்களும் துண்டானது

காட்பாடி - விழுப்புரம் ரயில்வே மார்க்கத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் வாசலில் அமர்ந்து
thiruvannamalai train accident
Published on: 
Updated on: 
1 min read

திருவண்ணாமலை மாவட்டதில், அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சௌபல்யா தன்ராஜ் (20), மற்றும் கௌதீன் சென்ஹீ (23) ஆகிய இரண்டு இளைஞர்களும் தமிழகம் வந்துள்ளனர். இதற்காக இருவரும் புரூஸ்லியா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். 

kannamangalam train accident

இந்நிலையில் காட்பாடி டு விழுப்புரம் ரயில்வே மார்க்கத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் வாசலில் அமர்ந்து கொண்ட இருவரும் கால்களை தொங்கவிட்டு வந்ததுள்ளனர். அப்போது ரயில் கண்ணமங்கலம் ரயில்வே பிளாட்பாரத்தை நெருங்குவதை கவனிக்காத இருவரும் கால்களை தொங்கவிட்டபடியே இருந்துள்ளனர். ரயில் பிளாட்பாரத்தில் வந்ததும், இரண்டு வாலிபர்களின் கால்களும் பலமாக மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. பிளாட்பாரத்தில் மோதிய இருவரின் கால்களும் துண்டாகி கால்கள் ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் வலியால் இருவரும் துடித்துடித்துள்ளனர்.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு கால்கள் துண்டாகி துடித்துக் கொண்டிருந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படியில் பயணம் செய்ததாலும், ரயில் பிளாட்பாரத்தை நெருங்குவதை கவனிக்காமல் இருந்ததாலும் இந்த விபத்து நடந்துள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அஜாக்கிரதையாக இருப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com