லாரி மோதி ஒருவர் பலி; மூவர் காயம்! பூனே - மும்பையில் நடந்த பயங்கர விபத்து!

பூனே - மும்பை விரைவுச்சாலையில், பேருந்து மற்றும் காரில் லாரி மோதியது. இதனால், ஒருவர் இறந்துள்ளார் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லாரி மோதி ஒருவர் பலி; மூவர் காயம்! பூனே - மும்பையில் நடந்த பயங்கர விபத்து!
Published on
Updated on
1 min read

பூனேவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கொபோலி பகுதிக்கு அருகில் 36.800 கி.மீ வேகத்தில், கார் மற்றும் பேருந்தில் மோதி, லாரி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இறந்த லாரி ஓட்டுனர், 42 வயதான, பீட் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சகரம் கடே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கடந்த திங்களன்று, (ஆக்ஸ்ட் 8), பூனேவில் இருந்து மும்பை செல்லும் வழியில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படும் நிலையில், சாலையில் மற்றொரு பேருந்தையும், ஒரு காரையும் மோதியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குக் காரணமான லாரி, ப்ரேக் செயலிழப்பு காரணமாக இடித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், பேருந்து பயணிகள் இருவரும், காரில் பயணித்த ஒருவரும் விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com