சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து...

பூவிருந்தவல்லி அருகே சக்கரை லோடு ஏற்றி சென்ற லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து...
Published on
Updated on
1 min read

சங்ககிரியில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு சில மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்து கொண்டு தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது.

இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்ததால் லாரியின் ஒரு பகுதி சாய்ந்த நிலையில் இருந்தது இதையடுத்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com