
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுமியும் மணிகண்டனும் திருமணம் செய்து கொள்ள நினைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சிறுமி விட்டு இல்லாததை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
சிறுமி எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று சிறுமியை குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் மணிகண்டனும் வீட்டில் இல்லாததை அறிந்து இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிறுமியை காணவில்லை என வழக்கு பதிவு செய்து வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் மற்றும் சிறுமியை தேடி கண்டுபிடித்து சமாதானம் செய்து அவர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மணிகண்டன் சிறுமியை அழைத்து சென்றதால் சிறுமியின் வீட்டார் மணிகண்டனின் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மணிகண்டன் தனது வீட்டை விட்டு வெளியேறி ஆலந்தலை பகுதிக்கு அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த அவரது உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் ஆலந்தலை பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு மணிகண்டன் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இதனை கவனித்து வந்த சிறுமியின் தம்பி மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
பின்னர் தனது நண்பர்களை தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்ட சிறுமியின் தம்பி நேற்று வேளைக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மணிகண்டனை தோப்பூர் விலக்கு அருகே வழிமறித்து மூன்று பேரும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடி உள்ளார். இருப்பினும் அவரைப் பின் தொடர்ந்த மூன்று பெரும் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு அப்பகுதியை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் சிசிடிவி கட்சியின் அடிப்படையில் சிறுமியின் தம்பியான ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆதிமூலம் மற்றும் நல்ல முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.