

தமிழக வெற்றி கழக கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் என் சிவகுரு. இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததும் மற்றும் அந்தப் பெண்ணின் ஏழு வயது மகனை தாக்கியது தொடர்பாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக வழக்கறிஞர் சிவகுரு திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும், அதற்கு இடையூறு இருந்ததாக கருதி அந்த பெண்ணின் மகனான 7 வயது சிறுவனை தாக்கியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் சிவகுரு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தமிழக வெற்றி கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூரை சேர்ந்த கப்பல் மாலுமியின் மனைவியுடன் பழகி வந்த தவெக வழக்கறிஞர் சிவகுரு அவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். மாலுமி அளித்த புகாரில் போக்சோ வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகிறது போலீஸ். கப்பல் மாலுமி பணியில் இருந்த 4 மாத இடைவெளியில் அவரது மனைவியுடன் நெருங்கிப் பழகி தனது வலையில் விழ வைத்துள்ளார் சிவகுரு. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதை பார்த்த அப்பெண்ணின் 7 வயது மகனுக்கு சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பணி காலம் முடிந்து கடலூர் வந்து விசாரித்த கணவன் புகாரளிக்கவே, சிவகுரு மற்றும் மாலுமியின் மனைவி மீது போச்சோ வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர் போலீசார்.
இதையடுத்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக வெற்றிக் கழகம் கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞரணி இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த திரு.N.சிவகுரு என்பவர் கட்சி தலைமையின் கட்டுபாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும், கழகத் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளது. எனவே நமது கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சார்பு அணிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் என யாரும் இவரிடம் கழகம் சார்ந்த எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்பதை தெரிவைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.