பள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன செய்தார்கள் தெரியுமா?

கள்ளக்குறிச்சியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திய இரண்டு  வாலிபர்கள் போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன செய்தார்கள் தெரியுமா?
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி  வயது 17 கடந்த 21 தேதி வீட்டிலிருந்து  மளிகை கடைக்கு சென்றுள்ளார். மாணவி வெகு நேரமாகியும் வீடு மாணவி திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன மாணவியின் பெற்றோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தனர்.

சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அதே கிராமத்தை  சேர்ந்த கொங்கு நாட்டான் மகன் மணிமுத்து வயது 19 மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஸ்டாலின் வயது 20 மாணவியை கடத்தியது தெரியவந்தது.

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மாணவி மற்றும் மாணவியை கடத்திய மணிமுத்து மற்றும் ஸ்டாலின் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இருவரையும் மடக்கிப்பிடித்து போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து மாணவியை கடத்திய இரண்டு நபரிடம் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com