மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த மாமா! இரண்டு நண்பர்களை கூட்டு சேர்த்த கொடூரம்

வன்கொடுமை செய்த அந்த நபர் குழந்தையின் மாமா என்று குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்
bihar child abuse case
Published on
Updated on
1 min read

பீகாரில், 22 வயதான இளைஞர் ஒருவர் மூன்று வயது குழந்தையை, தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் குழந்தையின் மாமா என்று குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். பாட்னாவில் வெள்ளிக்கிழமை இரவு, குழந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளையில், ​​போதைக்கு அடிமையான அக்குழந்தையின் மாமா, குழந்தையை தூக்கிச் சென்று சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு வயலுக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, அவரும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் அலறல் சத்தம் அப்பகுதி முழுக்க கேட்க தொடங்கியது. ஆரம்பத்தில், குழந்தை திருடன் அப்பகுதிக்குள் நுழைந்தாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். அதன் பின்பு, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் குழந்தையை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பி ஓடினர். பின்னர், காணாமல் போன சிறுமியைத் தேடிக்கொண்டிருந்த குடும்பத்தினர், விரைவில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, ​​அக்குழந்தை அதிக இரத்தப்போக்குடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, முக்கியக் குற்றவாளியான சிறுமியின் மாமாவையும், அவரது நண்பர்களில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். மூன்றாவது குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். “உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், இரண்டு நபர்களைக் கைது செய்ததுடன், ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக குற்ற நடந்த இடத்திற்கு தடயவியல் ஆய்வகக் குழுவும் வரவழைக்கப்பட்டது.” “தற்போது, ​​அந்தக் குழந்தை பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறது. மேலும், நாங்கள் மேலதிக விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"விரைவான விசாரணையையும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு விரைவான தண்டனையையும் உறுதி செய்வதற்காக, குழந்தை மற்றும் குழந்தையின் தாயின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும்," என ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com