"முகம் சிதைந்து உயிரிழந்த நபர் " - அரிவாளால் சரமாரியாக தாக்கிய கும்பல்.. மோப்பநாய் உதவியுடன் விசாரணை

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், பேருந்து
magesh
magesh Admin
Published on
Updated on
1 min read

திருவாரூர் பகுதியை சேந்த மகேஷ் இவருக்கு வயது 28 மற்றும் கீழ துவள் எம்ஜிஆர் நகரத்தைச் சேர்ந்த நவீன் இவருக்கு வயது 20 இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வேலடிமடை கிராமத்தில் உள்ள அறுவடை இயந்திரத்தில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று வேலையே முடித்துவிட்டு இரவு பேருந்து நிலையத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், பேருந்து நிருத்தத்தில் இருந்த மகேஷ் மற்றும் நவீனை அவர்கள் கொண்டுவந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.இந்த கொடூரத்தகுத்தலில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயகளுடன் உயிர் தப்பிய நவீன் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று, அங்குள்ள உற்ற மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நவீனை மருத்துமனையில் சேர்த்த பொதுமக்கள், மகேஷை ரத்தவெள்ளத்தில் பார்த்தவுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பா இடத்திற்கு விரைந்து வந்து, மகேஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் 'லக்கி' என்ற மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com