முறையற்ற உறவு வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்டீவன் பிளாட்ல் என்ற அமெரிக்கர், 2018-ம் ஆண்டில் ஒரு துயரமான கொலை-தற்கொலை சம்பவத்தில், தனது சொந்த மகள், அவர்களின் குழந்தை மற்றும் அப்பெண்ணின் வளர்ப்புத் தந்தை ஆகியோரைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஸ்டீவன் கொலைகளைச் செய்ததாகத் தன் தாயிடம் ஒப்புக்கொண்ட பிறகு, அவர் வட கரோலினா காவல்துறையை அழைத்தார் . அவரது சொந்த மகளும் மனைவியுமான கேட்டி பிளாட்லும், அவரது வளர்ப்புத் தந்தையான அந்தோனி ஃபுஸ்கோவும் பின்னர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். 20 வயதான பிளாட்ல் மற்றும் 56 வயதான ஃபுஸ்கோ ஆகியோரின் கோரமான சடலங்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு லாரியில் கண்டெடுக்கப்பட்டன. அதே நாளில், நூற்றுக்கணக்கான மைல்கள் தெற்கே வட கரோலினாவின் நைட் டேலில் உள்ள தம்பதியரின் வீட்டிற்குள் கேட்டியின் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், நியூயார்க்கின் டோவரில் ஒரு மினி வேனில், ஸ்டீவன் பிளாட்ல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காயத்துடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தத்து கொடுக்கப்பட்ட கேட்டிக்கு 18 வயதானபோது, சமூக ஊடகங்கள் வழியாகத் தனது சொந்தப் பெற்றோருடன் மீண்டும் இணைய அவர் எடுத்த முடிவெடுத்தார். அலிசாவிற்கு 15 வயதாக இருந்தபோது ஸ்டீவனை இணையத்தில் சந்தித்ததாக அவர் கூறினார். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட உறவின் விளைவாக, அலிசா கருவுற்றுள்ளார். இளம் அலிசாவைத் திருமணம் செய்துகொள்ள ஸ்டீவன் வற்புறுத்தியதால், விரைவில் அவர்கள் டெனிஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஆனால், ஸ்டீவனின் தொடர்ச்சியான வன்முறை நடத்தை காரணமாக, அலிசா குழந்தையின் காப்பாளர் உரிமையை இழந்தார், இறுதியில் குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுத்துள்ளனர். அந்த குழந்தைக்குத்தான் அவர்களது வளர்ப்பு பெற்றோர் கேட்டி என்று பெயரிட்டுள்ளனர்.
கேட்டிற்கு 18 வயது ஆகும் வரை அவர்களின் பராமரிப்பில் வளர்த்துள்ளார். பின்பு தன்னை பெற்றெடுத்த பெற்றோரைக் கண்டறிய விரும்பியுள்ளார். தனது பெற்றோரை கண்டடைந்த பின்னர் கேட்டி அவரது தந்தை ஸ்டீவ்வுடன் ஏற்பட்ட உறவின் காரணமாக கர்ப்பமானார். இதைத் தொடர்ந்து, ஸ்டீவ் கேட்டியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார், இதனால் அலிசா வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கேட்டு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அதன் பின்பு இருவருக்கும் ஏற்பட்ட தகரத்தின் காரணமாக ஸ்டீவன் தனது மகள் மற்றும் மனைவியான கேட்டியை கொலை செய்துவிட்டு, அவரின் வளர்ப்பு தந்தை, கேட்டின் குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து இறந்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.