வாட்ஸ்அப் மெசேஜ் ‘JOKE’ - பயங்கர அச்சுறுத்தலாக மாறி மாணவி கைது! ஏன்மா இதெல்லாம் ஒரு ஜோக்கா?

சல்டானா பகிர்ந்திருந்தது “நெதன்யாகு, நான் சொல்வது உங்களுக்குக் கேட்டால்..
US Student Arrested
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில், இஸ்ரேலிய பிரதமர்பெஞ்சமின் நெதன்யாகு குறித்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட செய்திகளை அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டலாகக் கருதியதைத் தொடர்ந்து,  புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் (FIU) பயிலும் 23 வயது மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேப்ரியேலா சல்டானா என்ற மாணவி, 2026 ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற இருந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்வை குறித்துப் பேசும் போது, குழுவில் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தகவல்களின் படி, ஏப்ரல் 16ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையில், 215 உறுப்பினர்களைக் கொண்ட மாணவர் வாட்ஸ்அப் குழுவில் இந்தச் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும், அவற்றை தானே அனுப்பியதாகவும் சல்டானா ஒப்புக்கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சல்டானா பகிர்ந்திருந்தது “நெதன்யாகு, நான் சொல்வது உங்களுக்குக் கேட்டால், ஓஷன் பேங்க் பட்டமளிப்பு மையத்தில் உள்ள கேப்ஸ்டோன் மாணவர்களாகிய எங்களுக்காக சில பான்பான்ஸ் போடுங்கள்”. இந்தச் செய்திகளில் “பான்பான்ஸ்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது வெடிகுண்டுகளை குறிக்கும் மறைமுக வார்த்தையாகும். மேலும், “ஒரு குண்டு வெடிக்கப் போகிறது” என்ற வகையிலான மற்றொரு செய்தியும் அந்த குழுவில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள், பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிறைவு விழாவை முன்னிட்டு பகிரப்பட்டதால், மாணவர்கள் அதனை தீவிர அச்சுறுத்தலாக கருதி உடனடியாக வளாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட பிறகு, அந்தச் செய்திகள் “முட்டாள்தனமான நகைச்சுவை” என்ற நோக்கத்தில் அனுப்பப்பட்டதாக சல்டானா விளக்கம் அளித்தார். மேலும், அந்த நிகழ்வை மறுதிட்டமிட வேண்டும் என்ற விரக்தியிலேயே அவை பதிவிடப்பட்டதாகவும், “மன்னிக்கவும்” என்ற குறிப்பையும் அவர் சேர்த்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. நீதிபதி இந்தச் செய்திகள் நம்பத்தகுந்த அச்சுறுத்தலாகவே கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு 5,000 டாலர் பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 4.6 லட்சம் ஆகும். தற்போது, எழுத்துப்பூர்வமாக கொலை அல்லது உடல்ரீதியான சேதம் விளைவிப்பதாக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், சல்டானா மீது இரண்டாம் நிலை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com