மாணவனுடன் உல்லாசம்.. மீண்டும் மீண்டும் புக் செய்யப்பட்ட ஹோட்டல் அறை ! ஆசிரியருடனான ரகசியக் காதல் அம்பலமானது எப்படி?

அதே ஹோட்டலில் மே 8, ஜூன் 4, ஜூன் 11 மற்றும் ஜூலை நான்காம் தேதி உள்ளிட்ட தேதிகளில் குறைந்தது நான்கு முறையாவது அறையை முன்பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Teacher student sexual relationship
Teacher student sexual relationship
Published on: 
Updated on: 
1 min read

அமெரிக்காவில், மினசோட்டாவைச் சேர்ந்த ஒரு உயர்நிலைப் பள்ளி சிறப்பு கல்வி ஆசிரியை, பதின்மவயது மாணவர்களில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்காக மீண்டும் மீண்டும் ஹோட்டல்களின் அறைகளை முன்பதிவு செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான ஆன மார்கரெட் பேக்கன், டார்டன் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த விவாகரம் குறித்து போலீசாரின் விசாரணையில், அந்த பள்ளியில் 18 வயது இளைஞன் பட்டம் பெற்று ஒரு மாதம் கழித்து, அதாவது ஜூலை 2023-ல்தான் அந்த மாணவனுடன் தான் உடலுறவு கொள்ளத் தொடங்கியதாக ஆரம்பத்தில் கூறியிருக்கிறார் .

ஆனால், ஒரு ஹோட்டலில் அவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படம் ஒன்று அந்த ஆசிரியரிடம் காட்டப்பட்ட பின்னரே அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த ஹோட்டலில் அவர்களுடன் விருந்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களுக்கும் மார்கரெட் மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது கிடைத்த பதிவுகளின்படி, அந்த ஆசிரியர் அதே ஹோட்டலில் மே 8, ஜூன் 4, ஜூன் 11 மற்றும் ஜூலை நான்காம் தேதி உள்ளிட்ட தேதிகளில் குறைந்தது நான்கு முறையாவது அறையை முன்பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விவாகரத்தில், ஆசிரியையும் அந்த மாணவரும் ஒருவருக்கொருவர் மிகவும் “ரகசியமாக நடந்துகொள்வார்கள்” என்று ஒருவரும், அதே சமயம் மற்றொருவர், இருவரின் அந்தரங்கப் புகைப்படங்களையும் தனது கைப்பேசியில் வைத்திருந்துள்ளதாக காவல்துறையிடம் கூறியதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மார்கரெட் சிறுவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகவும் பலர் தெரிவைத்துள்ளனர். இதனையடுத்து, தானும் தனது ஆசிரியையும் காதலித்து வந்ததாகவும், மேலும் அந்த சிறுவன் ஆசிரியையின் குடியிருப்பில் தங்கியிருந்ததாகவும் அந்தச் சிறுவன் பின்னர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இறுதியில் அந்த ஆசிரியை, சிறுவன் பதின்மவயது மாணவனாக இருந்தபோதே அந்த சிறுவனுடன் பாலியல் உறவைத் தொடங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இந்த குற்றச்சாட்டினை முன்வைத்து மார்கரெட்டுக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆகஸ்டில் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு கல்வியாளராகப் பணியமர்த்தப்பட்ட மார்கரெட் , 2024 பிப்ரவரியில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட அதே நாளில் தனது வேலையை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.