உத்தரப் பிரதேச மாநிலம், ஜாலான் மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான கோவிந்த் நிஷாந்த். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் தம்பி கடந்த 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்திருக்கிறார். எனவே அவரது மனைவியான சாவித்திரி தனது மாமனார் மற்றும் மாமியாருடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நிஷாந்த் தனது மனைவியுடன் அடிக்கடி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் என சொல்லப்படுகிறது.
அப்போது நிஷாந்திற்கும் அவரது மச்சானின் மனைவி சாவித்திரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இது அவர்களது குடும்பத்தினரை தவிர உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தெரியும் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து சுமார் 1,000 கி.மீ. பயணம் செய்து வந்தத் நிஷாத், தனது மனைவியின் சகோதரரின் மனைவியான சாவித்திரியை சந்திக்க அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த ( ஆக 11) ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் சாவித்திரியின் வீட்டிற்கு நிஷாந்த் சென்றுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சாவித்திரியின் அறையில் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தினருக்கு, அறைக்குள் இருந்து யாரோ மெதுவாக பேசும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அறையை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த பெட்டி ஒன்றைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் கோவிந்த் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை வெளியே அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணையில், கோவிந்துக்கு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதும், அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல், சாவித்திரிக்கும் சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்ளின் செயலால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் இருவரையும் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து செல்லும் வெடி தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. இந்த நிலையில், சுமார் 1,000 கி.மீ. தொலைவில் இருந்து வந்த கோவிந்த், நள்ளிரவில் கள்ளக்காதலி சாவித்திரியின் வீட்டுக்குள் சென்று பெட்டிக்குள் பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்