கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் கைது...

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் கைது...

வளசரவாக்கத்தில் வீட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

சென்னை | வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி(40), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா இவர்களோடு உறவினர் இறந்து விட்டதால் அதில் கலந்து கொள்ள சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து வளசரவாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஜாமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(60), என்பது தெரியவந்தது.

இந்த இடத்தில் தமிழ்நாட்டை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் வேறு எங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com