சென்னை வேளச்சேரியில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வேளச்சேரி காவலர் காமராஜ் சாலையில் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டு போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த கணேசன் மற்றும் அவரது மகன் பிரித்தீபனை அங்கிருந்து கிளம்ப சொல்லியுள்ளார்.
அப்பொழுது அவர்கள் இருவரும் காவலர் காமராஜை அவதூறான வார்த்தைகளால் பேசி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர், இது குறித்து காவலர் காமராஜ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆபாசமாக பேசியது, கையால் அடித்தது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தந்தை கணேசன்(55), மற்றும் மகன் பிரித்தீபன்(33) ஆகிய இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்