“உன் புருஷன் உயிரோடு இல்லை” - நகைகளுக்காக மகன் இறந்ததாக பொய் சொன்ன தந்தை.. மருமகளை கொலை செய்து விடுவதாக மிரட்டல்!

தொடர்ந்து பல ஆண்டுகளாக மாமனார் கோவிந்தராஜிடம் தனது கணவர் இளங்கோ குறித்து கேட்டபோது..
“உன் புருஷன் உயிரோடு இல்லை” - நகைகளுக்காக மகன் இறந்ததாக பொய் சொன்ன தந்தை.. மருமகளை கொலை செய்து விடுவதாக மிரட்டல்!
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் 45 வயதுடைய இளங்கோவன் பிஎச்டி படித்து முடித்துவிட்டு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இளங்கோவனுக்கு குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகளான 35 வயதுடைய இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இளங்கோ அவரது மனைவி இலக்கியா இருவரும் சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

அப்போது அவரது கணவர் குடும்பத்தினர் பண தேவைகள் உள்ளதாக கூறி இலக்கியாவின் நகைகளை வாங்கி தங்களிடம் வைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது. எனவே திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இலக்கியா தனது கணவர் இளங்கோவை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அதன் பின்னர் தங்கம் நகரில் உள்ள தனது கணவரின் தந்தையான கோவிந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சென்று தன் கணவர் குறித்து விசாரித்த போது எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அதே நேரத்தில் நகைகளையும் திருப்பித் தராமலும் இருந்துள்ளனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மாமனார் கோவிந்தராஜிடம் தனது கணவர் இளங்கோ குறித்து கேட்டபோது “உன் புருஷன் உயிரோடு இல்லை” என உயிருடன் இருந்த மகன் இறந்து விட்டதாக பொய் கூறியுள்ளார்.

Admin

தனது கணவர் வீட்டார் தனது நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தன்னுடன் வாழாமல் இருப்பது குறித்து காவல் நிலையத்தில் ஏற்கனவே இலக்கியா புகார் அளித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இளங்கோ தனது பெற்றோர் வீட்டில் தங்கம் நகரில் இருப்பதாக இலக்கியாவிற்கு தகவல் கிடைத்ததுள்ளது.

Admin

இதனை தொடர்ந்து இலக்கிய தனது உறவினர்களுடன் சென்று இளங்கோவிடம் தன்னுடைய நகைகள் குறித்து கேட்டபோது இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் இலக்கியாவின் உறவினர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.எனவே இலக்கியா குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் “கணவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்” என புகாரளித்தார். புகாரின் பேரில் கணவர் இளங்கோ மாமனார் கோவிந்தராஜ் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து இளங்கோவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளங்கோவின் தந்தை கோவிந்தராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com