"தளபதிக்குத்தான் ஓட்டு போட்டேன்…" புகாரளிக்க வந்தவரை சரமாரியாக தாக்கிய துணை சபாநாயகர்! மறுநாளே தலைகீழான காட்சி - என்ன நடந்தது?

"நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன், தளபதி... தளபதி" என்று பலமுறை அவர் முதல்வர் விஜயின் பெயரை உச்சரித்தபோதும் அந்த நபரை சரமாரியாக தாக்கி எட்டி உதைத்து விரட்டி அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ravi Shankar viral video
Ravi Shankar viral video
Published on: 
Updated on: 
2 min read

திருச்சி, துறையூரில் கோரிக்கையை குறித்து துணை சபாநாயகர் இடம் கூற வந்த நபரை துணை சபாநாயகரே கடுமையான தககியதாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நபர் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர். தனது வார்டில் ஒருவார காலமாக குடிநீர்வரவில்லை என்றும் குப்பைகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கையில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரான துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தீபாவளி தினமான நேற்று (நவ 08) மண்ணச்சநல்லூர் பகுதிக்கு அவசர வேலையாக வந்த கார்த்திக்குமார், மணச்சநல்லூரில் வசித்து வரும் துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்தித்து முறையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பொதுமக்களில் ஒருவர் என்றும் பாராமல் கார்த்திக்குமாரை தகாத வார்த்தையால் அவரை பேசியதுடன், "நான் தளபதிக்கு தான் வாக்களித்தேன், தளபதி... தளபதி" என்று பலமுறை அவர் முதல்வர் விஜயின் பெயரை உச்சரித்தபோதும் அந்த நபரை சரமாரியாக தாக்கி எட்டி உதைத்து விரட்டி அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு துணை சபாநாயகர் இதுபோன்று அடாவடியில் ஈடுபடுவது நல்லதல்ல என்று சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், குறைகளை தெரிவிக்க வந்த தனது சட்டமன்றத் தொகுதி நபர் தகாத வார்த்தையால் பேசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை சபாநாயகரால் தாக்குதலுக்கு உள்ளாகிய கார்த்திக் குமார் மண்ணச்சநல்லூர் அரசுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, போலீசார் கார்த்திக் குமாரை அங்கிருந்து வெளியே செல்லும்படியும், "துணை சபாநாயகருக்கு எதிராக புகார் அளிக்கக்கூடாது" என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளத்தில் பெரும் பேசுபொருளான இந்த விவகாரம் தற்போது வேறு விதமாக மாறியுள்ளது. சபாநாயகர் நேற்று ஒருவரை தாக்கிய வீடியோ வைரலாக நிலையில், இன்றைய தினம் தாக்கப்பட்ட நபரான கார்த்திக் குமார் துணை சபாநாயகருடன் அமர்ந்து பேசும் வீடியோ வைரலாகிவருகிறது.

அதில் அவர், “நேற்று நான் துணை சபாநாயகரை சந்திக்க அவர் வீட்டுக்கு வந்தேன். கூட்டத்தில் தள்ளு முள்ளாகி கொஞ்சம் பிரச்சனை ஆகி விட்டது. அதனை சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக நான் அவரை தற்போது நேரில் சந்தித்தேன். சமூகவலைத்தளத்தில் தவறாக சித்தரிப்பதை யாரும் ஏற்க வேண்டாம்" என்று கூறியதோடு, கட்சியில் ஒரே குடும்பமாக பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அருகில் துணை சபாநாயகர் உட்கார்ந்திருக்க மற்றொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Ravi Shankar viral video
“குடும்பத்தையே கொன்றுவிடுவோம்” - எழுதி கொடுத்து பேச வைத்தார்களா.. துணை சபாநாயகர் தாக்கிய விவகாரத்தில் திருப்பம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.