விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உயிரிழப்பு; திருக்காட்டுப்பள்ளியில் கடையடைப்பு! 

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உயிரிழப்பு; திருக்காட்டுப்பள்ளியில் கடையடைப்பு! 
Published on
Updated on
1 min read

பூதலூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜி.எஸ்.பிரபு, அப்பகுதி முன்னாள் அதிமுக வார்டு கவுன்சிலராக பணியாற்றியவர். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும், பூதலூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் பழமார்நேரியில் ஒரு கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபுவை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை நடந்த இடத்திற்கு தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ்ராவத் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதிமுக முன்னாள் கவுன்சிலரும் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளருமான பிரபு கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com