ராசிபுரம் அருகே திமிங்கல எச்சம் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை ராசிபுரம் வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே உள்ள GVR என்ற தோட்டத்தில் திமிங்கில எச்சம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ராசிபுரம் வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள 18 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்ய முயன்ற பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஜலீல், ரவி ஆகிய மூவரையும் வனத்துறையினர் கைது செய்த நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை பறிமுதல் செய்து தற்போது ராசிபுரம் வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கொல்லிமலை பகுதியை சேர்ந்த சந்திரன் மற்றும் வாழப்பாடி பகுதியை சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்து வனத்துறை என தேடி வருகின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நிலையில், திமிங்கல எச்சம் ஆனது இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து A1 குற்றவாளி ஆன சந்திரன் பிடிபட்ட பிறகு முழுமையான தகவல்கள் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்…
திமிங்கல எச்சத்துக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?
ஆம்பர் கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கல எச்சம் உண்மையிலேயே மிகவும் மதிப்பு மிகுந்த ஒன்றாகும்.
அதன் தரம் அளவு பொறுத்து சந்தை மதிப்பு மாறுபடும். இது குறிப்பாக வாசனை திரவியம் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இதற்கு மவுசு அதிகமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்