

பெங்களூருவைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவர், தனது மனைவி மீது துன்புறுத்தல், பாலியல் அத்துமீறல், ஏமாற்றுதல் மற்றும் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புகார் அளித்துள்ளார். மேலும், 37 வயதான அந்த நபர், தனது திருமண வாழ்வில் மாமனார், மாமியார் தொடர்ந்து தலையிடுவதால் தம்பதியிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவதாகவும் காவல்துறையிடம் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, நாகர்பாவியைச் சேர்ந்த புகார்தாரர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் இடத்தில் 31 வயதான ஷில்பாவைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஜக்கூருவில் உள்ள ஒரு வில்லாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். தனது புகாரில், தனது மாமியார் ஆஷா, வீட்டிற்குள் அவர் செல்வதைத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது மாமியார், தனது மகளுக்கு ஒரு சிறந்த மணமகனைக் கண்டுபிடிப்பதற்காக, அவளை விட்டுப் பிரிந்து செல்லுமாறு தன்னைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரது மாமனார் மாதவ் கிருஷ்ணா, தன்னை மிரட்டுவதற்காக ஆட்களைத் தனது வீட்டிற்கு அனுப்பியதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். அவரது மனைவி, தனது நிதி நிலையை கேலி செய்ததாகவும், தன் மனைவியின் வாழ்க்கை முறையை ஆதரிக்கும் தனது திறனைக் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது மனைவி, அவரது 'பணக்கார' நண்பர்களுடன் நேரத்தைச் செலவழித்ததாகவும், அடிக்கடி விருந்துகளில் கலந்துகொள்வது மற்றும் மது அருந்துவது போன்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புகார்தாரர் தனது மனைவி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனரீதியான கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளார். அவர், தனது மனைவி தன்னை மீண்டும் மீண்டும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், மேலும், ஆபாசமான காணொளிகளை அனுப்பியதாகவும், அத்தகைய செயல்களை மீண்டும் செய்யுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் புகார்தாரர் கூறினார். மேலும், அவரது மனைவியின் தோழிகளில் ஒருவருடன் நெருக்கமான செயல்களில் ஈடுபடுமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டினார். இதுமட்டுமின்றி, அந்த நபரின் மனைவி அவரது முன்னாள் காதலர்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டதாகவும் அந்த நபர் கூறினார்.
இதனையடுத்து, அந்த நபர் இந்தப் பிரச்சினையை இரு தரப்பு பெற்றோரிடமும் கொண்டு சென்றார், மேலும் ஜூலை 4, 2024 அன்று குடும்பத்தினர் நடுவே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து, செப்டம்பர் 24, 2024 அன்று அந்த நபர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவரது மனைவி அவரது தாயாரால் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். தனது சீருடை மற்றும் ஒரு மடிக்கணினி ஆகிய மிகக் குறைந்த பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகப் புகார்தாரர் தெரிவித்தார்.
ரூ. 1.87 லட்சம் ரொக்கம், 44 கிராம் எடை கொண்ட மாலை, 35 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலி, 18 கிராம் எடை கொண்ட தங்கக் கைக்காப்பு, 11 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் உள்ளிட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், தனது கடவுச்சீட்டு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்கள், மற்றும் பல வீட்டுப் பொருட்கள் அந்த மாளிகையிலேயே இருப்பதாகவும், அவை சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் குற்றம் சாடியிருக்கிறார். மேலும், தனது மடிக்கணினியில் சேமிக்கப்பட்டிருந்த திருமணப் புகைப்படங்களும் காணொளிகளும் நீக்கப்பட்டதால், தனது மன உளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்குத் திருமணப் பரிசாகக் கிடைத்த வெள்ளித் தட்டுகளையும் விளக்குகளையும் தன் மனைவிக்குக் கொடுத்ததாகவும், தற்போது அவர், தனது உடைமைகளை மீட்கவும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையின் தலையீட்டைக் கோரியுள்ளார். துன்புறுத்தல், கட்டாயப்படுத்துதல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்த சிக்கலான திருமணத் தகராறு எனத் தோன்றும் இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்க கோரி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.