

புதுச்சேரி சந்தை, புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய ஞானமூர்த்தி. இவர் விபத்தில் வலது காலை இழந்த மாற்றுத்திறனாளியான வாழ்ந்து வரும் நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகனான 23 வயதுடைய கோகுல், மற்றும் கார்த்திக் என்பவரின் மகனான 24 வயதுடைய கதிரவன் ஆகியோர் ஞானமூர்த்தியின் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். எனேவ கோகுலும் கதிரவனும் அடிக்கடி ஞானமூர்த்தியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.
அப்போது பிரியாவிற்கு கதிரவனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக ஞானமூர்த்தியின் மனைவி பிரியா மற்றும் கதிரவன் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் இதனை அறிந்த ஞானமூர்த்தி, “எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்; நண்பனாக பழகி துரோகம் செய்யாதே” என கதிரவனை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களது உறவை கைவிடாத பிரியா மற்றும் கதிரவன் தொடர்ந்து பழகி வந்திருக்கின்றன.
இதற்கிடையில், முன்விரோதம் தொடர்பான அடிதடி வழக்கில் சிறையில் இருந்த ஞானமூர்த்தி, 4 நாட்களுக்கு முன்பு விடுதலையாகி வீடு திரும்பியபோது, கதிரவன் மற்றும் தனது மனைவி தொடர்பை கைவிடவில்லை என்பதை அறிந்து மனவேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து நண்பர்கள் கோகுல் மற்றும் ஞானவேலுவிடம் கூறிய நிலையில், கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கதிரவனுக்கு நன்கு அறிமுகமான 18 வயதுடைய ஞானவேலு (18), மூலம் கதிரவனை ஞாயிறு மாலை மோட்டார் சைக்கிளில் வழுதாவூர் சிவன் கோவில் பின்புறம் வரவழைத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த ஞானமூர்த்தி, கோகுல் மற்றும் ஞானவேலு ஆகியோர் சேர்ந்து கதிரவனை தாக்கி, கைகளை கட்டி கீழே தள்ளி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து உடலை கோவில் பின்புறம் வீசிய நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு, ஞானமூர்த்தி, கோகுல், ஞானவேலு ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பனை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.