காதலர் தினத்திற்கு மெரினா அழைத்துச் செல்லாததால் தீக்குளித்த மனைவி...

காதலா் தினத்தில் மொினாவுக்கு அழைத்து செல்ல கணவா் மறுத்ததால் மனைவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலர் தினத்திற்கு மெரினா அழைத்துச் செல்லாததால் தீக்குளித்த மனைவி...
Published on
Updated on
1 min read

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் 11ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஷியாமளா(30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு முகேஷ், மித்ரா என இரு பிள்ளைகள் உள்ளனர். மோகன் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினத்தின் பொழுது மாலை பணிமுடிந்த பின்பு மெரினா கடற்கரைக்கு செல்லலாம் என தனது மனைவியிடம் கூறிவிட்டு மோகன் பணிக்கு சென்றுள்ளார்.

ஆனால் மாலை நேரத்தில் அதிகளவு பணி வந்ததால் மெரினா கடற்கரைக்கு இன்று அழைத்து செல்ல முடியாது என மோகன் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷ்யமளா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் சுடுகாட்டிற்கு கையில்  பெட்ரோல் கேனுடன் வந்த ஷியமளா, மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். 

மேலும் அழைத்துச் செல்லவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன் என மிரட்டி வந்த நிலையில் தகராறு முற்றியதில் சியாமளா பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்துள்ளார். பின்னர் 50 சதவீதம் தீக்காயம் அடைந்த சியாமளாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com