"பெயிண்டருடன் கள்ளக்காதல்.. கணவரைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட மனைவி" - விபத்து என்று நினைத்த வழக்கில்.. திடீரென வந்த ட்விஸ்ட்!

அஸ்வினிக்கும் ஆனந்துக்கும் அறிமுகமாகி, அவர்களுக்குள் ஒரு உறவு மலர்ந்துள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ​​
Vijayapura hit-and-run case
Vijayapura hit-and-run case
Published on: 
Updated on: 
2 min read

கர்நாடகாவின் விஜயபுராவில், கருப்பு நிற எஸ்யூவி கார் ஒன்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. ஆரம்பத்தில் சாலை விபத்து என்று நினைத்த இந்த சம்பவத்தில், "திருமணத்திற்கு மீறிய உறவே விபத்திற்கு காரணம்" என்ற கசப்பான உண்மை வெளியே வந்துள்ளது.

இந்த குற்றச்செயலில் சிறுவன் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏகதா நகரைச் சேர்ந்த 42 வயதான ராஜசேகர் பிராதர், விஜயபுரா ரிங் ரோடு மற்றும் ஜும்னல் ஆகியவற்றை இணைக்கும் சாலையில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். எப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குப் பிறகு, உயிரிழந்தவரின் மனைவியான அஸ்வினி போக்குவரத்து காவல் நிலையத்தை அணுகி, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தன் கணவர் மீது மோதியதாக தெரிவித்துள்ளார். காவல்துறையோ ஆரம்பத்தில், அஜாக்கிரதையான மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல், கொலைக்கு நிகராகாத மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், சம்பவத்தின் சூழ்நிலைகள் காரணமாக, காவல் கண்காணிப்பாளர் உயர்மட்ட விசாரணையை நகரத் துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இது ஒரு சாலை விபத்து என்ற கோணத்தில் காவல்துறையினர் அணுகினாலும், சம்பவம் அதற்கு இடம் தரவில்லை. காவல்துறையின் கூற்றுப்படி, வாகனத்தின் வேகம் மற்றும் விபத்துக்கு முன்பு பிரதாரைப் பின்தொடர்ந்து ஒருவர் சென்றது ஆகியவை அவரது மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாக கூறியுள்ளனர்.

மேலும் விசாரணையின் போது, ​​தம்பதியரின் வீட்டில் பணிபுரிந்த பெயிண்டரான ஆனந்தை போலீசார் விசாரணைக்காகக் கைது செய்துள்ளனர். அவரது வாக்குமூலம் அஸ்வினியின் வாக்குமூலத்திலிருந்து வேறுபட்டதாகக் கூறப்படுகிறது. இது போலீசாரை இந்த வழக்கை மேலும் விசாரிக்கத் தூண்டியுள்ளது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் பிராதரைக் கொலை செய்து, அவரது மரணத்தை ஒரு சாலை விபத்தாகக் காட்ட சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, பிரதார் மற்றும் அஸ்வினிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஆறு வயது இரட்டை மகன்கள் உள்ளனர். “சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, இந்தத் தம்பதியினர் ஒரு புதிய வீட்டைக் கட்டி, அதற்கு வண்ணம் பூசுவதற்காக ஆனந்தைப் பணியமர்த்தியுள்ளனர். அந்த சமயத்தில் அஸ்வினிக்கும் ஆனந்துக்கும் அறிமுகமாகி, அவர்களுக்குள் ஒரு உறவு மலர்ந்துள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ​​அதன் பிறகு, அவரும் ஆனந்தும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ நினைத்துள்ளனர்.

இதற்கு இடைஞ்சலாக இருக்கும் தன் கணவரைக் கொல்ல அஸ்வினி ஒரு சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனந்த் அந்தத் திட்டத்திற்குச் சம்மதித்து, அதைச் செயல்படுத்த, வண்ணம் பூசும் தொழிலாளியான தனது நண்பர் சச்சின் மற்றும் ஒரு சிறுவனின் உதவியை நாடியுள்ளார்.

அக்டோபர் 4 அன்று, பிரதார் தனது காலை நடைப்பயிற்சிக்காகப் புறப்பட்டபோது, ​​அஸ்வினி ஆனந்தை எச்சரித்ததாகவும், அதன் பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் பிரதாரை பின்தொடர்ந்து சென்று, அவர் செல்லும் இடத்தை சச்சின் மற்றும் அந்தச் சிறுவனுக்குத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பதிவு எண் இல்லாத கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் வந்த இருவரும் , ஜும்னல் சாலையில் பிரதார் மீது பின்னால் இருந்து மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இந்த மரணம் ஒரு விபத்தாகக் கருதப்படும் என்று நம்பி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாகனத்தை ஜும்னலில் நிறுத்திவிட்டு தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகே, விசாரணையில் இந்த சதித்திட்டங்கள் அனைத்தும் அம்பலமாகியுள்ளது. தற்போது, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com