கடன் கட்டலனா அடிப்பீங்களா?... அராஜகம் செய்த TVS FINANCE...!!

கடன் கட்டலனா அடிப்பீங்களா?...  அராஜகம் செய்த TVS FINANCE...!!

கடன் தவனை கட்ட தவறிய முதியவரை  டிவிஎஸ் பைனான்ஸ் ஊழியர் ஒருவர் அடித்து இழுத்து சென்ற சம்பவத்தின் விடியோ வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன், ஆசாரி வேலை செய்து வரும் இவர்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிவிஎஸ் கம்பெனியில் முன் பணம் செலுத்தி இருசக்கர வாகனம் எடுத்து உள்ளார்.  மீதி பணத்திற்கு மாதம் தவணையில் கட்டி உள்ளார்.

இவர் மாதம் தவணை தொகை சரியாக கட்டி முடித்ததால் டிவிஎஸ் கிரிடிட் கம்பெனி மூலம் இவருக்கு பர்சனல் லோனாக  50,000 ரூபாய் கடனாக வழங்கப்பட்டது.  இதற்காக மாதம்  தவணையாக ஆயிரத்து 950 ரூபாய் கட்டி வந்த நிலையில், இந்த மாத தவணை சரியாக கட்டவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடராஜன் உறவினர் வீட்டின் திருமணத்திற்கு புறப்பட்டு செல்லும் போது ஆண்டிகுப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.  அப்போது அங்கு வந்த  டிவிஎஸ் பைனான்ஸ் ஊழியர்  விக்கி என்பவர் நடராஜனிடம் இந்த மாதத்திற்கான தவணை தொகை கேட்டுள்ளார்.  அப்போது நடராஜன் பார்க்கு இடமெல்லாம் தவனையை கேட்பீர்களா என கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த விக்கி கடன் கட்ட துப்பு இல்லாதவனுக்கு கேள்வி கேட்ட துணிச்சல் ஒரு கேடா என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு தகராறூ ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் வாய்தகராறு முற்றிய நிலையில் டிவிஎஸ் பைனான்ஸ் ஊழியர்  விக்கி நடராஜனை சரமாரியாக தாக்கி தர தரவென இழுத்து சென்றுள்ளார். உடனே சுதாரித்து கொண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டனர்.  இந்த சம்பவத்தில் காயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com