

தெலுங்கானாவில் பெண் ஒருவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். அதற்க்கு தடையாக இருந்த தனது கணவனை, கள்ள காதலனோடு சேர்ந்து கொலை செய்து, அவரது உடலை ஒரு விவசாய நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணான கல்பனா (30), மே 18 அன்று தனது கணவர் முத்யம் ரெட்டி (42) காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2012-ல் திருமணம் செய்துகொண்ட கல்பனா மற்றும் முத்யம் ரெட்டிக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். கல்பனா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த நிலையில், கணவர் முத்யம் ரெட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு பழுதுபார்க்கும் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
விசாரணையின் போது, அருகிலுள்ள எல்கோய் கிராமத்தில் வசித்து வந்த 24 வயதான சிந்து என்பவருடன் கல்பனா கள்ள தொடர்பில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். கடந்த சில மாதங்களாக கல்பனாவும் சிந்துவும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கணவனுக்கு தெரிய வரவே “வேண்டாம் விட்டு விடு” என்று கண்டித்துள்ளார், மேலும் இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. காதலன் சிந்துவுடனான தனது உறவுக்குத் தன் கணவர் ஒரு 'தடையாக' மாறிவருவதாக கல்பனா நினைத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
மே 16ம் தேதி கணவன் குறித்த தகவல்களை, கல்பனா தன் காதலனிடம் தெரிவித்துள்ளர். அதன்படி அவரிடம் ஆழ்துளைக் கிணற்று மோட்டாரைப் பழுதுபார்ப்பதாகக் கூறி, அவரை மனூர் மண்டலத்திலுள்ள யெல்கோய் என்ற தன் கிராமத்திற்கு அழைத்துச் சென்றான் சிந்து. தன் சகோதரன் உதவியுடன், ரெட்டிக்கு மதுபானம் கொடுத்து, பின்னர் அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலைத் அவர்களின் சொந்த வயலிலையே புதைத்துள்ளனர். கொலை நடந்த நாளன்று, தொலைபேசி உரையாடல் பதிவுகள் கல்பனாவின் பொய்க் கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ரெட்டி கொலை செய்யப்பட்ட மே 16 அன்று, கல்பனா தனது காதலன் சிந்துவுடன் 16 முறை பேசியதாக கூறப்படுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, அழைப்புத் தரவுகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை ஒப்புக்கொண்டதகாவும் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கட ரெட்டி தெரிவித்தார். எல்கோய் கிராமத்தின் புறநகர்ப் பகுதிக்கு அருகே முத்யம் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு விவசாய நிலத்தில் குழி தோண்டி உடலைப் புதைத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அவர்கள் அப்பகுதியை மண் மற்றும் கற்களால் மூடியதாகக் கூறப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் தோண்டி எடுக்கப்படுகிறது. "இந்தக் குற்றத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டிருந்தார்களா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்," என டிஎஸ்பி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பெண்ணையும் அவரது காதலரையும் கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.