"கள்ளகாதலியுடன் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்!" காரில் தொங்கியபடி மடக்கி பிடித்த மனைவி

உறவு குறித்து தான் கேள்வி எழுப்பும்போதெல்லாம், அவர் தன்னை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டித் துன்புறுத்தியதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.
Bareilly Incident
Bareilly IncidentBareilly Incident
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேசம், பரேலி மாவட்டத்தின் பாமோரா பகுதியில் உள்ள தேவ்சரா சௌராஹாவில், கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணுடன் பயணம் செய்ததாகக் குற்றம் சாட்டிய தனது கணவரைத் தடுக்க முயன்றபோது, ​​38 வயதான பெண் ஒருவர் ஓடும் காரின் முன்பக்கத்தைப் பிடித்துத் தொங்கியதால், சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவம், அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியான பின்னரே செவ்வாய்க்கிழமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமோரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, பரேலியின் சுபாஷ் நகரைச் சேர்ந்த கோதாவரி என்பவர், தனது கணவரான 42 வயதான நேத்ரபால் சிங், தங்களது சொந்த கிராமமான கட்கா ராமனைச் சேர்ந்த 32 வயதான சாதனா என்ற பெண்ணுடன் கள்ள உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவு குறித்து தான் கேள்வி எழுப்பும்போதெல்லாம், அவர் தன்னை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டித் துன்புறுத்தியதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில், கோதாவரி தேவ்சரா சந்திப்பில் அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டதும், வாகனத்தை நிறுத்த முயன்றதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், தான் வாகனத்தின் முன்பக்கத்தில் தொங்கி இருந்தவாறே தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்துள்ளார். ஆனாலும் கூட அவரது கணவர் தொடர்ந்து வாகனத்தை ஓட்டியுள்ளார். இறுதியில் அங்கிருந்தவர்கள் காரை வழிமறித்து கோதாவரியை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது அவர் காயமடைந்தும் உள்ளார்.

இதனையடுத்து, கோதாவரி தனது புகாரில், கள்ளத்தொடர்பில் இருந்த சாதனா தன்னைத் தாக்கி, தனது தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்தக் கலவரத்தின்போது தனது மாமாவின் வாகனம் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை நிராகரித்த சாதனா, தான் வட்டார அலுவலகத்திலிருந்து திரும்பும்போது நேத்ரபாலிடம் இருந்து லிஃப்ட் மட்டுமே பெற்றதாகவும், கோதாவரியால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தாக்கப்பட்டதாக அவரது தரப்பில் இருந்து கூறியுள்ளார்.

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், தாக்குதல் மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிஎன்எஸ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நேத்ரபால் மற்றும் சாதனா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாமோரா காவல் நிலைய ஆய்வாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com