பல் வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்.. மர்மம் மரணம்! மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்.. நடந்தது என்ன?

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது
Woman dies mysteriously
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன், இவரது மனைவி லலிதா (45). இவர் நேற்று காலை சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கே பல் செட்டை மாற்றிவிட்டு நிரந்தரமாக பல் வைப்பதற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில மணி நேரங்களில் லலிதா திடீரென உயிரிழந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கடலூர் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பின்னர் போலீசார் அவர்களை மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத லலிதாவின் மகள் பிரசன்னா இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்ததாக குற்றம் சாட்டிய அவரது மகள் பிரசன்னா, அதனால் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது எனக் கூறினார். இந்நிலையில் லலிதாவின் மகள் பிரசன்னா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் நாளை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லலிதாவில் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து உறவினர்கள் குறிப்பிடுவது, பல் மருத்துவக் கல்லூரியில் தாயாருக்கு ஊசி போட்டு பல் சிகிச்சை செய்துள்ளனர். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். பல் மருத்துவக் கல்லூரியில் எப்படி சிகிச்சை அளித்தார்கள் என்கிற முழு வீடியோ விவரங்களை தர வேண்டும் நாங்கள் கொடுத்த பணத்திற்கு அவர்கள் ரசீது தரவில்லை, அது குறித்தும் விசாரிக்க வேண்டும் இந்த மருத்துவமனை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எங்களது தாய்க்கு என்ன நடந்தது? என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். இந்த மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாததால் வேறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம் என கூறினார்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல அடிப்படை வசதிகள் இல்லை, இந்த மருத்துவமனைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து உரிய வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com