
கோவையில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் தாய் மற்றும் அவரது காதலர் கைது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குடும்ப வன்முறைகளும் திருமணத்தை மீறிய உறவுகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரில் உள்ள, மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி தமிழரசி (25). இவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற மகள் இருந்தார். ரகுபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரகுபதியும், மனைவி தமிழரசியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
குழந்தை அபர்ணா ஸ்ரீ, தாய் தமிழரசியின் பராமரிப்பில் இருந்தார். தமிழரசி கட்டிடத் கூலித் தொழிலாளி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 25) வீட்டில் இருந்த குழந்தை அபர்ணா ஸ்ரீ அசைவற்று இருந்தார். இதைப் பார்த்த தாய் தமிழரசி குழந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை உயிரிழந்தது தொடர்பாக தாய் தமிழரசியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின்னர், முரணாகப் பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், தமிழரசி தனது மகள் அபர்ணா ஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமாகவும் போலீஸார் இதை உறுதிப்படுத்தினர்.
மேலும், கடந்த 8 மாதங்களாக கணவரைப் பிரிந்து தமிழரசி வசித்து வருகிறார். கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், உடன் வேலை செய்யும் வசந்த் (23) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார். இவர்களின் வாழ்வுக்கு முதல் குழந்தை இடையூறாக இருந்துள்ளார். அபர்ணாவை பிரிந்து வந்தால்தான் திருமணம் என வசந்த் தெளிவாக கூறியதால் பெட்ரா தாயே தனது மக்களை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.