குற்ற உணர்வே இல்லையா? கணவன் உடல் மீது கட்டப்பட்ட சமையலறை..! காதலனுடன் உல்லாச வாழ்க்கை..! ஓராண்டுக்கு பிறகு வெளிவந்த உண்மை!!

காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்றுவிடலாம் என திட்டம் தீட்டிய மனைவி, காதலன் இம்ரான் ...
ahamadabad horror
ahamadabad horror
Published on
Updated on
1 min read

பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி, முகமது இஸ்ரேல் அக்பரலி அன்சாரி (எ) சமீர் பிஹாரி, இவருக்கு ரூபி என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அகமதாபாத்தின் சர்கேஜ் நகரில் உள்ள அகமதி ரோ பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஓராண்டுக்கு முன்பு  இம்ரான் வகேலா என்ற நபருடன் ரூபிக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் காதல் விவகாரம் சமீர்-க்கு தெரிய வரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருக்கும் ஆத்திரத்தில் அவரை போட்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது.

காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்றுவிடலாம் என திட்டம் தீட்டிய மனைவி, காதலன் இம்ரான் மற்றும் அவரின் இரு நண்பர்களோடு இணைந்து அமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். 

சமீர் இறந்த பின்னர் சமீரின் உடலை, சமையலறை மேடையின் மீதே புதைத்து அதன் மீது சிமெண்ட் போட்டு, டைல்ஸ் -ம் பதித்துள்ளார்.

அக்கம் பக்கத்தினரிடம் வெளியூருக்கு வேலைக்கு சென்ற கணவன் திரும்பவே இல்லை என ‘கணவன் காணாமல்’ போய்விட்டதாகவே நாடகமாடியுள்ளார். ஆனால் அதன் பிறகு அதே வீட்டில் தனது காதலனுடன் ஓராண்டாக ரூபி வாழ்ந்து வந்துள்ளார். மேலும் கணவனை புதைத்த இடத்திலேயே  கள்ளக்காதலனுடன் சமைத்து, உண்டு வாழ்ந்து வந்துள்ளார். 

ஆனால் காணாமல் போன சமீர் குறித்து கடந்த புதன் கிழமை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் இம்ரானை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததில் இம்ரான் கொலையை ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு போலீசாரை அவரே அழைத்துச் சென்றுள்ளார்.  ஒரு நிர்வாக நீதிபதி முன்னிலையில், சமையலறை தோண்டப்பட்டுள்ளது, அதில் எலும்புக்கூடு, முடி, திசுக்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி DNA -சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

நேற்று மாலை ரூபி மற்றும் இம்ரான் கைது செய்யப்பட்ட நிலையில்,  இம்ரானின் நண்பர்களான மொஹ்சின் பதான் (20), ரஹீம் ஷேக் (22) ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com