
ராஜஸ்தானில், வெள்ளிக் கொலுசுக்காக பெண்ணின் காலை துண்டித்து, கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்பூரை சேர்ந்தவர் கீதா தேவி. இவர் நேற்று தனது நிலத்தில் கால்நடையை மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர், அவரது காலை வெட்டியுள்ளனர்.
மேலும் அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காலில் கிடந்த வெள்ளி கொலுசினை திருடி சென்றதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினருக்கு இழப்பீடாக வேலை வழங்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் பெண்ணின் சடலத்துடன் போராட்டம் நடத்தினர்.