

சென்னை மாவட்டம், முகப்பேர் மேற்கு திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அருகே உள்ள சந்தில் இன்று மதியம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் அருகிலேயே வாலிபர் ஒருவர் மதுபோதையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ நகர் போலீசார் பார்த்த போது அந்த பெண்ணிற்கு சுமார் 50 முதல் 55 வயதிருப்பது அந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.
இதனை போலீசார் கொலையுண்ட பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெண் சடலம் அருகே மது போதையில் தூங்கி கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் முகப்பேர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஷேக் என்பதும் அதே பகுதியில் கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் தொடர் விசாரணையில் நேற்று மது போதையில் இருந்த ஷேக் சாலையோரம் வசித்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு செய்ய முயன்ற போது அந்த பெண் மறுத்து தகராறு செய்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஷேக் பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்ததும் பின்னர் மது போதையில் அங்கேயே தூங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷேக் அளவுக்கு அதிகமான மது போதையில் இருப்பதால் இது குறித்த முழுமையான தகவல் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். சாலையோரம் வாழ்ந்து வந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.