“எனக்கு படிக்கணும்” காதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்..! மாமன் செய்த கொடூரம்!

காதலிப்பதால் சரியாக கல்லூரி படிப்பில், கவனம் செலுத்த முடியவில்லை என காயத்ரி ரத்தினகுமாரிடம் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்...
man burnt his lover
man burnt his lover
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார் வயது 24, இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கி ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ரத்தினகுமார் அதே கடலூரை சேர்ந்த, அவரது அப்பாவின் சகோதரி மகளான காயத்ரியை காதலித்து வந்துள்ளார்.காயத்ரி தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு, நாவலூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்துள்ளார்.

காதலிப்பதால் சரியாக கல்லூரி படிப்பில், கவனம் செலுத்த முடியவில்லை என காயத்ரி ரத்தினகுமாரிடம் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காயத்ரி தங்கியிருந்த OMR சாலை நாவலூர் பகுதியில் உள்ள விடுதிக்கு அருகில் சென்ற ரத்தினகுமார். காயத்ரியை செல்போனில் தொடர்பு கொண்டு “உன்னிடம் சிறிது நேரம் பேசவேண்டும் உன் விடுதிக்கு அருகில் தான் இருக்கிறேன் வெளியில் வா” என அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது நமது காதலை தொடர வேண்டும் என்று ரத்தினம் கூறிய நிலையில் காயத்ரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினம் தான் கேனில் எடுத்து வந்த பெட்ரோலை, காயத்ரி மீது ஊற்றி லைட்டரை பயன்படுத்தி தீ வைத்துள்ளார்.

தீ உடல் முழுவதும் பரவியதை அடுத்து, இதை பார்த்த அப்பகுதி மக்கள் காயத்ரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் இதனை காவல் துறைக்கு தெரிவித்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த தாழம்பூர் போலீசார்.ரத்தினகுமாரை கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com