அக்காவை காதலிக்க சொல்லி.. தங்கைக்கு தொல்லை! “கொன்று விடுவேன்” என மிரட்டல்.. இளைஞர் போக்சோவில் கைது

அந்த பெண்ணின் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கை டியூஷன் முடித்துவிட்டு அரசு பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்
pocso
Published on: 
Updated on: 
1 min read

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் அரசு பள்ளியில் சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். அக்கா 11ம் வகுப்பிலும், தங்கை 10ம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். இதில் 11 ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் கோபால் என்பவர் ஒருதலைபட்சமாக காதலிப்பதாக தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கை டியூஷன் முடித்துவிட்டு அரசு பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அவரை சந்தித்து மாணவன் கோபால் உனது அக்காவை காதலிக்க சொல் என்று தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும் அப்படி காதலிக்கவில்லை என்றால் உங்கள் இருவரையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டிய கோபால். வீட்டிற்கு சென்ற மாணவி இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

அதனையடுத்து இளம் பெண்ணின் தாயார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் கோபால் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

திருத்தணி சுற்றியுள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியாக சிறுவர்கள் இளைஞர்கள் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர் திருத்தணியில் சமீபத்தில் இதனால் படுகொலை ஒன்றும் நடைபெற்றது. இதுபோல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு காரணமானவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com