
ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.
இந்நிலையில் குடிபோதையில் தான் கொடுத்த பணத்தை ராஜ்குமார் கணேசனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கணேசன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்தன் ஆகிய இருவரும் ராஜ்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.