
ராணிப்பேட்டை மாவட்டம் அவரக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை தென்னம் வித்து பண்ணை அருகே கடந்த ஏழாம் தேதி இரவு 10 மணி அளவில் ஆண் நண்பருடன் இளம் பெண் ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் இளம் பெண்ணின் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி கத்தியை காண்பித்து மிரட்டி அவரை அங்கிருந்து ஓடச் செய்துள்ளனர்.
பின்னர் தனியாக பயத்துடன் நின்று இருந்த இளம் பெண்ணை கத்தி காட்டி மிரட்டி சிறிது தூரம் அடர்த்தியான காட்டு பகுதிக்குள் அழைத்துச் சென்று மூன்று நபர்களும் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது உறவினர்களுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் நேரடி உத்தரவின் மேற்பார்வையில் ராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் காவல்துறையினர் இளம்பெண் தெரிவித்த தகவல் மற்றும் அங்க அடையாளங்கள் செல்போன் சிக்னல்களை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்
இந்த நிலையில் அவரக்கரை பகுதியை சேர்ந்த சிவராஜ்(23) ராஜா(22) பார்த்திபன்(24) ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் பிடித்து தனியாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது மூன்று நபர்களும் இளம் பெண்ணை கத்தியை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
மேலும் இளம்பெண்ணும் குற்றவாளிகள் இவர்தான் என உறுதிப்படுத்தியதை தொடர்ந்து மூன்று நபர்களின் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
ஆண் நண்பருடன் இருந்த இளம் பெண்ணை கத்தி காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.