“குடும்பம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த தம்பி” - 10 ஏக்கர் நிலத்திற்காக தகராறு செய்த அண்ணான்.. மாடு வியாபாரியின் பேராசையால் சோகம்!

அண்ணன் தம்பி இருவருக்கும் பூர்வீக சொத்து சுமார் 10 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்லப்படுகிறது..
“குடும்பம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த தம்பி” - 10 ஏக்கர் நிலத்திற்காக தகராறு செய்த அண்ணான்.. மாடு வியாபாரியின் பேராசையால் சோகம்!
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறை பட்டியைச் சேர்ந்தவர் 70 வயதுடைய அரசன். இவரது தம்பி 65 வயதுடைய பழனியாண்டி. அரசனுக்கு திருமணமான நிலையில் ஒரு மகன் உள்ளார். ஆனால் பழனியாண்டி திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வசித்து வந்துள்ளார். அரசனின் மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் சென்னையிலேயே தங்கி வசித்து வருகிறார். எனவே அரசன் தனது சொந்த ஊரான மட்டப்பாறைபட்டியில் மாடு வியாபாரம் செய்து கொண்டு மனைவியான காளியம்மாளுடன் வசித்து வந்தார்.

பழனியாண்டிக்கு குடும்பம் இல்லாத காரணத்தால் தனது அண்ணனா அரசனின் வீட்டிற்கு அருகிலேயே குடிசை அமைத்து வசித்து வந்தார். அண்ணன் தம்பி இருவருக்கும் பூர்வீக சொத்து சுமார் 10 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பழனியாண்டிக்கு தனக்கு பிறகு குடும்பம் இல்லாததால் அந்த நிலத்தை பிரிப்பதில் அண்ணன் தம்பி இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Admin

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பேச வாக்குவாதம் முற்றி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தம்பி பழனியாண்டி தாது அண்ணனை இரும்பு பைப்பினால் தாக்கியதில், அரசனுக்கு நெற்றி மற்றும் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அரசனின் சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை உடனடியாக மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.‌

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் அரசனின் உடைலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் அண்ணனை தம்பி இரும்பு குழாயில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com