சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் இளைஞர் கைது...

கள்ளக்காதலியின் பேத்தியை பாலியல் தொல்லை கொடுத்த கறிக்கடைக்காரர் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் இளைஞர் கைது...
Published on
Updated on
1 min read

மதுரை | யாகப்பா நகரைச் சேர்ந்தவர் வசந்த். 27 வயதான இவர் கறிக்கடை நடத்தி வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 48 வயதுடைய பெண் ஒருவர் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது வசந்திற்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக் காதலாக மாறிய நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி, கணவர், மகள், மருமகன் மற்றும் பேத்தி ரிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த பெண்ணின் பேத்தியை அவரது தாய் பார்த்துக் கொள்ள அனுப்பியுள்ளார். வசந்துடன் தங்கி வந்த நிலையில், அந்த பெண்ணின் பேத்தியும் வசந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.

குழந்தை என்ற தைரியத்தில் வசந்துடன் வைத்திருந்த அந்த பெண்ணிற்கு, வசந்தின் மறு பக்கம் தெரியாது போலும். 27 வயதே ஆன அவசந்த், அந்த பெண் மட்டுமின்றி, அவரது பேத்தி மீது ஆசை வளர்த்து, அவ்வப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லைகள் குறித்துப் யாரிடமும் கூறக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் இது குறித்து தகவல் தெரிந்த நிலையில், அதிர்ச்சியில் ஆழ்ந்தார் அந்த பெண். பின், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com