காதலியை தேடி சென்ற இளைஞரை தர்ம அடி கொடுத்து துரத்திய உறவினர்கள்!

காதலியை தேடி சென்ற இளைஞரை தர்ம அடி கொடுத்து துரத்திய உறவினர்கள்!
Published on
Updated on
1 min read

இளைஞர் ஒருவர் தன் காதலியை பார்க்கச் சென்ற பொழுது, காதலியின் உறவினர்கள் கடினமாக தாக்கியதில், படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன். 21 வயதான இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நிரஞ்சன் அதே பகுதியை சேர்ந்த ரம்யாவை காதலித்து வந்துள்ளார். ரம்யா அடிக்கடி நிரஞ்சன் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரம்யா இது போல் நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் உள்ள பெரியவர்கள் நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை முறை என்று கூறி, ரம்யாவை சமாதானப்படுத்தி உள்ளனர். அதன் பிறகு ரம்யா நிரஞ்சனை சந்திப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டில் தெரிய வர அவர்கள் ரம்யாவை திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளனர்.இதனால், நிரஞ்சன்  விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. 

காதலியை எப்படியாவது பார்த்தே தீர வேண்டும் என முடிவெடுத்த நிரஞ்சன் ரம்யாவை காண நேரடியாக அவரின் பாட்டி வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரம்யாவியின் தாய்மாமன் உள்ளிட்ட உறவினர்கள் நிரஞ்சனை கண்மூடித்தனமாக தாக்கியது மட்டும் அல்லாமல் அவரின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட ரம்யாவியின் தாயாமன், காதல் வேண்டி கிடக்குதா உன் மகனுக்கு , வந்து உங்க பிள்ளையை அள்ளி கொண்டு போங்க என்றுக் கூறி  தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனை கேட்டு பதறியடித்து கொண்டு சென்ற நிரஞ்சனின் பெற்றோர் நிலைகுலைந்து இருந்த மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நிரஞ்சனுக்கு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தர்ம அடி கொடுத்த பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com