உளறிய அஜித்... மாட்டிய இளையராஜா...!!

உளறிய அஜித்... மாட்டிய இளையராஜா...!!
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர், போதையில் ஒரு கொலை சம்பவம் பற்றி உளறியதால், 10 மாதங்கள் நிலுவையில் இருந்த கொலை வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகரில், இளைஞர் ஒருவர் குடி மற்றும் கஞ்சா போதையில் ரகளை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அஜித்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கைது செய்து கூட்டி வரும் போது, போதையில் ஏதோ தப்பு செஞ்சிட்டேன்.. என்னை விட கொலை செஞ்வனை எல்லாம் விட்டுட்டீங்க என உளறியுள்ளார் அஜித்.

இதனால் சுதாரித்துக் கொண்ட காஞ்சிபுரம் போலீசார் அஜித்தை அமர வைத்து ப்ளாஷ்பேக்கை கேட்கத் தொடங்கினர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வெங்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா( 24), சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

அப்பொழுது, இளையராஜாவின் செல்போனை வாங்கிய சீனிவாசன் திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி இளையராஜா, அவரது நண்பர் தினேஷ் மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் இணைந்து, ஊத்துக்காடு பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது சீனிவாசன் மற்றும் இளையராஜா ஆகிய இருவருக்கிடையே போதையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் தினேஷ் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து சீனிவாசனை இரும்பால் அடித்து கொலை செய்துவிட்டு, ஊத்துக்காட்டு ஏரியில் பிரேதத்தை புதைத்து விட்டு அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அஜித் கூறிய தகவலின் அடிப்படையில், இளையராஜா மற்றும் தினேஷை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இளையராஜா மற்றும் தினேஷ்

பின்னர் இருவரையும் கைது செய்து, உடலை புதைத்த இடத்திற்கு சென்று தோண்டி உடலை கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து, இளையராஜா மற்றும் தினேஷிடம் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், காவலர்கள். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com