
கோவை குனியமுத்தூர் அருகே இளைஞர் ஒருவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர் ஜீவாநகரை சேர்ந்தவா் ரகுமத்துல்லா. இவர் தனது நண்பர் ஒருவருடன் செல்வபுரம் தில்லை நகருக்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு என்பதால், அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென ரகுமத்துல்லாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையும் படிக்க : தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வி துறை...!
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடி வந்த ரகுமத்துல்லாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் யாராவது கத்தியால் குத்திக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.