கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவ மாணவி...

மருத்துவ கல்லூரி மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவ மாணவி...
Published on
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த வேலுசாமியின் மகள் காயத்ரி . திருவாரூர் மருத்துவ கல்லூரியில்  5 - ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு  மருத்துவகல்லூரி விடுதியில் தான் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக  தெரியவந்துள்ளது. இதனிடையே நேற்று உயர்நீதிமன்ற உத்தரவு படி, திருவாரூர் தாலுக்கா காவல்துறையினரிடமிருந்து வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இன்று சிபிசிஐடி ஆய்வாளர் ரஹமத்நிஷா,  விடுதி் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே மாணவி காயத்ரியின் உடற்கூறாய்வு, சிபிசிஐடி டிஎஸ்பி அன்பரசு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் நடைப்பெற்றது. அதன் பிறகு மாணவி காயத்ரியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு திருவாரூரில் தகனம் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com