பிரபல கன்னட நடிகை மர்ம மரணம்

கன்னட நடிகை ஷோபிதா ஷிவண்ணா வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபல கன்னட நடிகை மர்ம மரணம்
Published on
Updated on
1 min read

கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் 30 வயதான ஷோபிதா ஷிவண்ணா. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரை சேர்ந்த இவர், கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதியன்று நடிகை ஷோபிதா, சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுவரை 12-க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான இவர் இறுதியாக ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த சுதீர் என்பவருக்கும் ஷோபிதாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. சமீப காலமாக கணவன் - மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகவும், இதையடுத்து தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிய ஷோபிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com