1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...
Published on
Updated on
1 min read

திருச்சி | சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள்  கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர்  கல்யாணி  தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். 

அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில் கடந்த 13 நாட்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில்  ரூ. 1 கோடியே,09  லட்சத்து,78 ஆயிரத்து 651 ரொக்கமும்,1 கிலோ 699 கிராம் தங்கமும், 3 கிலோ 266 கிராம்  வெள்ளியும், 402 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனத்  கோயிலின் இணை ஆணையர்  தகவல் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com