கிருஷ்ணகிரி | அருகே கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம் மற்றும் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனக்காட்டுப்பகுதி அருகிலேயே இவ்வூர் அமைந்துள்ளதால் மான் மற்றும் பன்றி, மயில், போன்ற வனவிலங்குகளால் ஏற்கனவே விவசாயிகள் பாதிப்பு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, புளியம்பட்டி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மலைப் பாம்பினை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டு உயிரோடு அருகில் உள்ள ஒன்னகரை வனப்பகுதிக்குள் விட்டனர்.
மேலும் படிக்க | ஒரே வீட்டில் பிடிப்பட்ட ஆறு கொம்பேறி மூக்கன் பாம்புகள்...!!
ஒரு மாத காலங்களாகவே மலைப்பாம்பு உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், மீண்டும் இரவு 12 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு புளியம்பட்டி குடியிருப்போர்களுக்கு பகுதியில் உலா வந்தது. அதனை பொதுமக்கள் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்,
தொடர்ந்து மலைப் பாம்பு கிராமத்திற்கு நுழைவுதால் , அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆடு கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வனத்துறை அதிகாரிகள் தினசரி வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மேலும் காட்டு விலங்குகள் விலை நிலங்களில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.