
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. வேன் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
அதே மில்லில் வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த சங்கீதா என்பவரும் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
மேலும் படிக்க | மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...
இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்துää இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதே போன்று பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோயில்பாளையத்தை சேர்ந்தவர் தீபிகா. இளங்கலை பட்டதாரியான தீபிகாவின் அம்மா உணவகம் நடத்தி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கதிரேசனுடன் அடிக்கடி தீபிகாவின் தாயார் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்ற போதுää கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | தாய் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் வெட்டிக் கொலை செய்த மகன்!
அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரே நேரத்தில் இரு காதல் ஜோடிகள் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.