ராம நவமியை முன்னிட்டு 2000 லிட்டர் பால் அபிஷேகம்...

ராம நவமியை முன்னிட்டு பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை 2000 லிட்டர் பால் உள்ளிட்ட திவ்ய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராம நவமியை முன்னிட்டு 2000 லிட்டர் பால் அபிஷேகம்...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | இன்று ராமநவமி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது.

36 அடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இங்கு ராம நவமியை முன்னிட்டு 36 அடி விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2000 லிட்டர் பால் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் ஶ்ரீ ராம மூர்த்திக்கு புண்ஹாவசனம் விசேஷ மூலமந்திரம் யாகம் உள்ளிட்டவை நடந்தது அதனைத்தொடர்ந்து 106 திவ்ய தரிசன நிலங்களுக்கு யாத்திரையாக சென்று ராமர் பாதத்திற்கு பூஜை செய்யப்பட்ட ராமர் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இன்று மாலை சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com